உள்ளூர் செய்திகள்

கணபதியில் லாரி மோதி கல்லூரி மாணவர் பலி

Published On 2023-09-28 14:57 IST   |   Update On 2023-09-28 14:57:00 IST
  • சத்திரோடு அண்ணாநகரில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே வந்த போது விபத்து.
  • புகாரின் பேரில் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

சரவணம்பட்டி,

கோவை கணபதி மாம ரத்தோட்டத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவர் மாநாகராட்சி மேற்கு மண்டல உதவி செயற்பொறியாளராக பணியாற்றி வருகிறார்.

இவரது மகன் சஞ்சித்விஷ்ணு(வயது18). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

சஞ்சித் விஷ்ணு நேற்று வெளியில் சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். கணபதி சத்திரோடு அண்ணாநகரில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே வந்த போது, எதிரே வந்த சரக்குலாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் அவர் தூக்கி வீசப்பட்டு சாலையில் பல த்த காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் சஞ்சித் விஷ்ணுவை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதா பமாக இறந்து விட்டார்.

இதுகுறித்து அவரது தந்தை நாகராஜ் கொடுத்த புகாரின் பேரில் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

விபத்து நடந்த அந்தப்பகுதி போக்குவரத்து நெருக்கடி நிறைந்த பகுதியாகும். இதனால் இங்கு அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது.

எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் அங்கு உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags:    

Similar News