வருவாய் துறையின் கீழுள்ள நிலுவை மனுக்கள் மீது தீர்வு காண கலெக்டர் ஆய்வு
- நிலுவை யில் உள்ள மனுக்கள் மீது விரைந்து தீர்வு காண நடவ டிக்கை மேற்கொள்ள வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
- வருவாய் அலுவலர், வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்ட பல்வேறு அலுவலர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
நாமக்கல்:
கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில், நிலுவை யில் உள்ள மனுக்கள் மீது விரைந்து தீர்வு காண நடவ டிக்கை மேற்கொள்ள வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில், நாமக்கல் மாவட்டத்தில் வருவாய் துறையின் கீழ் நிலுவையில் உள்ள மனுக்கள் மீது தீர்வு காணும் வகையில் கிராமம் தோறும் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமையில், வருவாய் கிராமத்திற்கு சம்பந்தப்பட்ட அலுவலர்கள் குழு முகா மிட்டு, மனுக்கள் மீது தீர்வு காண திட்டமிடப்பட்டு உள்ளது. அந்த வகையில், நாமக்கல் வட்டம் புதுச்சத்தி ரம் ஊராட்சி ஒன்றியம், மின்னாம்பள்ளி ஊராட்சியில் மாவட்ட கலெக்டர் தலை மையில் மாவட்ட வருவாய் அலுவலர், வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்ட பல்வேறு அலுவலர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.