உள்ளூர் செய்திகள்

கோவை வக்ரகாளியம்மன் கோவில் ஆடிக்குண்டம் திருவிழா

Published On 2023-08-08 15:00 IST   |   Update On 2023-08-08 15:00:00 IST
  • இந்த ஆண்டுக்கான 12-வது ஆடிக்குண்டம் திருவிழா வருகிற 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
  • விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் திருவிழா வருகிற 15-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

கோவை,

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி.புதூர் பிரிவில் ஸ்ரீ த்ரி நேத்ர தசபுஜ வக்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிக்குண்டம் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான 12-வது ஆடிக்குண்டம் திருவிழா வருகிற 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று காலை 6 மணிக்கு கணபதி ஹோமத்துடன் குண்டம் திருவிழா தொடங்குகிறது.

அதனை தொடர்ந்து குண்டம் திருவிழாவுக்கான கொடியேற்றப்பட்டு, காப்பு கட்டப்படுகிறது. 12-ந் தேதி(சனிக்கிழமை) காலை 5 மணிக்கு அஷ்டபுஜ காலபைரவ ஹோமமும், பக்தர்கள் காப்புகட்டுதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. 13-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) குத்துவிளக்கு பூஜையும், 14-ந் தேதி(திங்கட்கிழமை) திருவாபரணம் திருசீர்வரிசை கொண்டு வருதல், திருக்கல்யாண நிகழ்ச்சி மற்றும் குண்டம் பற்ற வைத்த நிகழ்ச்சியும் நடக்கிறது.

விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் திருவிழா வருகிற 15-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. அன்று காலை 6 மணிக்கு கரகம், பூவோடு, பால்குடம் எடுத்து வீதி 

Tags:    

Similar News