உள்ளூர் செய்திகள்

தேரோட்டம் நடந்தபோது எடுத்த படம்.

கடையநல்லூர் முப்பிடாதி அம்மன் கோவிலில் தேரோட்டம்

Published On 2023-06-01 09:04 GMT   |   Update On 2023-06-01 09:04 GMT
  • கடையநல்லூர் முப்பிடாதி அம்மன் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ திருவிழா கடந்த 23-ந் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெற்றது.
  • 9-ம் திருநாளான நேற்று அதிகாலை அம்மன் திருத்தேரில் எழுந்தருளும் வைபவம் நடந்தது.

கடையநல்லூர்:

கடையநல்லூர் முப்பிடாதி அம்மன் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ திருவிழா கடந்த 23-ந் தேதி அம்பாள் தீர்த்த உற்சவம், காப்புக் கட்டுதலுடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற்றது. தினமும் கும்பஜெபம் ,ஹோமம், அபிஷேகம் ,தீபாராதனை, சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

கடந்த 10 நாட்களாக ஒவ்வொரு சமுதாயத்தினர் சார்பில் ஆடல், பாடல், செண்டைமேளம், இன்னிசைக் கச்சேரி ,வில்லுப்பாட்டு என ஒவ்வொரு நாளும் இரவில் நடைபெற்றது. அதன் பின்னர் இரவில் அம்மன் வீதி உலா நடைபெற்றது.விழாவின் 9-ம் திருநாளில் நேற்று அதிகாலை அம்மன் திருத்தேரில் எழுந்தருளும் வைபவம்,மதியம் முப்பிடாதி அம்மன் கோவில் சன்னதி முன்பிருந்து தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச்சென்றனர். நியூ பஜார், மெயின் பஜார், தேசிய நெடுஞ்சாலை, முப்பிடாதி அம்மன் கோவில் தெரு என பிரதான இடங்களில் தேரோட்டம் நடைபெற்றது. இரவில் ஊஞ்சல் தீபாராதனை நடைபெற்றது. தேரோட்டத்தில் கிருஷ்ணாபுரம், மேலக்கடையநல்லூர், மாவடிக்கால் ,முத்துகிருஷ்ணாபுரம், பண்பொழி, திருமலை கோவியில், அச்சன்புதூர், செங்கோட்டை என பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News