உள்ளூர் செய்திகள்

கோவையில் இருந்து கேரளா செல்லும் பஸ்கள் நிறுத்தம்

Published On 2022-09-23 09:49 GMT   |   Update On 2022-09-23 09:49 GMT
  • கேரள மாநிலத்தில் பஸ் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டு உள்ளது.
  • கேரள மாநிலத்துக்கு பஸ்கள் செல்லாததால் உக்கடம் பஸ்நிலையத்தில் கேரள மாநிலத்துக்கு செல்லும் பஸ்கள் நிறுத்தும் இடம் வெறிச்சோடி காணப்பட்டது.

கோவை

கேரள மாநிலத்தில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா இன்று கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர்.

இதன் காரணமான கேரள மாநிலத்தில் பஸ் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டு உள்ளது. மேலும் அனைத்து கடைகளும் அடைக்க ப்பட்டன.

கோவை உக்கடம் பஸ் நிலையத்தில் இருந்த கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு, திருச்சூர், கொடுங்கையூர், குருவாயூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கேரள மாநில போக்குவரத்து கழகம் சார்பில் தினசரி 10 பஸ்கள் இயக்கப்படுகிறது. போராட்டம் காரணமாக இந்த பஸ் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் உக்கடம் பஸ் நிலையத்தில் இருந்த கேரள மாநிலத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு தினசரி 9 பஸ்கள் இயக்கப்பட்டது. இந்த பஸ்களின் சேவையும் முற்றிலும் நிறுத்தப்பட்டது. இந்த 9 பஸ்களும் பொள்ளாச்சிக்கு திருப்பி விடப்பட்டு உள்ளது.

கேரள மாநிலத்துக்கு பஸ்கள் செல்லாததால் உக்கடம் பஸ்நிலையத்தில் கேரள மாநிலத்துக்கு செல்லும் பஸ்கள் நிறுத்தும் இடம் வெறிச்சோடி காணப்பட்டது.

இதனால் கேரள மாநிலத்துக்கு செல்வதற்காக வந்த பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். பஸ்கள் இயங்காததால் பயணிகள் ரெயில் மூலமாக கேரள மாநிலத்துக்கு சென்றனர்.

Tags:    

Similar News