உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

ஓசூரில் பா.ஜ.க ஆர்ப்பாட்டம்

Published On 2022-07-20 15:10 IST   |   Update On 2022-07-20 15:10:00 IST
  • எம்.பி. டாக்டர் செந்தில் குமார், இந்து மதம் மற்றும் தமிழர்களின் சடங்குகளை கீழ்த்தரமாக பேசியதற்கு கண்டனம்.
  • பா.ஜ.க. சார்பில் நேற்று ஓசூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஓசூர்,

தருமபுரி தொகுதி தி.மு.க. எம்.பி. டாக்டர் செந்தில் குமார், இந்து மதம் மற்றும் தமிழர்களின் சடங்குகளை கீழ்த்தரமாக பேசியதற்கு கண்டனம் தெரிவித்து, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் நேற்று ஓசூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஓசூர் ராம்நகர் கோட்டை மாரியம்மன் கோவில் நுழைவுவாயில் அருகே நடந்த ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிக்கு, கட்சியின் ஆன்மீகம் மற்றும் ஆலயமேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் ஓம் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட பா.ஜ.க.தலைவர் நாகராஜ் கண்டன உரையாற்றினார். இதில், மாநில, மாவட்ட, மண்டல, மாநகர, ஒன்றிய நிர்வாகிகள், அணிகளின் பொறுப்பாளர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்ட முடிவில், திடீரென செந்தில்குமாரின் உருவப்படத்தை கீழே வீசி கால்களால் மிதித்தும், காலணியால் அடித்தும் அவமரியாதை செய்தனர்.

அப்போது அங்கு பணியில் இருந்த போலீசார், செந்தில் குமாரின் உருவப்படத்தை, பா.ஜ.க.வினரிடமிருந்து கைப்பற்றினர். அப்போது, போலீசாருக்கும் பா.ஜ.க.வினருக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News