உள்ளூர் செய்திகள்

மகாகாளியம்மன் வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது.

மகா காளியம்மன் கோவிலில் ஆவணி திருவிழா

Published On 2022-09-12 15:06 IST   |   Update On 2022-09-12 15:06:00 IST
  • அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
  • அம்மனுக்கு கஞ்சி வார்த்தல், அன்னதானம், அபிஷேகமும் பெண்கள் திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது.

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் திட்டச்சேரி வெள்ளத்திடலில் மகாகாளியம்ன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் ஆவணி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழாவில் அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

இதை தொடர்ந்து மதியம் அம்மனுக்கு கஞ்சி வார்த்தல், அன்னதானம், அபிஷேகமும் இரவு 100-க்கும் மேற்பட்ட பெண்கள் திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது.

முக்கிய நிகழ்ச்சியான சாமி வீதியுலா நடைபெற்றது.

இதில் மகாகாளியம்மன் வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது.

தொடர்ந்து அக்னி கப்பரை வீதி உலா நிகழ்ச்சியும், பெரியாச்சி, வீரனுக்கு படையல், விடையாற்றி நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

ஏற்பாடுகளை கிராமவாசிகள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News