பண்ருட்டியில் பெட்டிக்கடைகாரர் மீது தாக்குதல்- வாலிபர் கைது
- பண்ருட்டியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் தினமும் குடித்துவிட்டு வந்து கடை முன் நின்று அனைவரையும் ஆபாசமாக பேசுவது வழக்கம்.
- ஞானசேகருக்கு தலை மற்றும் காலில் கடுமையாக காயம்ஏற்பட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கடலூர்:
பண்ருட்டி டைவேஷன் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் குணசேகர் மகன் ஞானசேகர். இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை ஒன்றை சொந்தமாக வைத்து வியாபாரம் செய்து வருகிறார். பண்ருட்டியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் தினமும் குடித்துவிட்டு வந்து கடை முன் நின்று அனைவரையும் ஆபாசமாக பேசுவது வழக்கம். நேற்று முன்தினம் காலை அதேபோன்று வழக்கமாக மணிகண்டன் கடை எதிரில் வந்து எல்லோரையும் பார்த்து ஆபாசமாக பேசி உள்ளார்.
இதனைப் பார்த்த ஞானசேகர் தினமும் இப்படி செய்தால் நான் எப்படி வியாபாரம் செய்வது. யார் கடைக்கு வருவது என்று அவரைக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் அவரை கடுமையாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில் ஞானசேகருக்கு தலை மற்றும் காலில் கடுமையாக காயம்ஏற்பட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கொடுத்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.