உள்ளூர் செய்திகள்
ஓசூரில் பேட்டரி கடையில் பூட்டை உடைத்து கொள்ளை
- மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீசி தேடி வருகின்றனர்.
- கடையில் இருந்த ரூ.95,000- மதிப்பிலான 23 பேட்டரிகளை திருடு போனது ெதரியவந்தது.
ஓசூர்,
ஓசூர் அலசநத்தம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 51). இவர் அந்த பகுதியில் பேட்டரி கடை வைத்துள்ளார்.
இந்தநிலையில், நேற்று அந்த கடையின் ஷட்டர் பூட்டை உடைத்து கிடந்ததை கிருஷ்ணன் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த ரூ.95,000- மதிப்பிலான 23 பேட்டரிகளை திருடு போனது ெதரியவந்தது.
மர்ம நபர்கள் இரவு நேரத்தில் கைவரிசை காட்டியது தெரியவந்தது.
இது குறித்து கிருஷ்ணன், ஓசூர் அட்கோ போலீசில் புகார் கொடுத்தார்.அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு சென்று கொள்ளை நடந்த இடத்தை பார்வையிட்டனர். மேலும் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.