உள்ளூர் செய்திகள்
- வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்
- சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம்
அரியலூர்:
கடலூர் மாவட்டம் கிளிமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அஞ்சப்பன் மகன் பிரகாஷ் ( வயது 22) பால்வண்டி டிரைவரான இவர், அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதிகளில் தொடர்ந்து பால் சப்ளை செய்ய அடிக்கடி சென்று வருவது வழக்கம்.
இந்நிலையில் பெரியாத்துக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை சென்னைக்கு கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
பின்னர் இது குறித்து தகவல் அறிந்த சிறுமியின் பெற்றோர்கள் ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் ஆண்டிமடம் போலீஸ் இன்ஸ் பெக்டர் முத்துக்குமார் வழக்கு பதிவு செய்து டிரைவர் பிரகாசை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.