உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்த போது எடுத்த படம்.

குமாரபாளையத்தில் கள்ளச்சாராயம் குறித்த விழிப்புணர்வு நாடகம்

Published On 2023-03-15 09:42 GMT   |   Update On 2023-03-15 09:42 GMT
  • கள்ளச்சாராயத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி குமாரபாளையம் பஸ் நிலையத்தில் தாசில்தார் தலைமையில் நடைபெற்றது.
  • இது குறித்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன.

குமாரபாளையம்:

கள்ளச்சாராயத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி குமாரபாளையம் பஸ் நிலையத்தில் தாசில்தார் சண்முகவேல் தலைமையில் நடைபெற்றது.

கள்ளச்சாராயத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து பாடல்கள் மூலமும், வசனங்கள் மூலமும் நடித்து காட்டி சேலம் ரேவதி கலைக்குழுவினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இது குறித்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன.

இந்த நிகழ்ச்சி காவேரி நகர், பள்ளிபாளையம் பிரிவு சாலை, கவுரி தியேட்டர் பிரிவு சாலை, ராஜம் தியேட்டர் பிரிவு, ஆனங்கூர் பிரிவு உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்றது. பொதுமக்கள் திரண்டு நின்று இந்த நிகழ்ச்சியை பார்வையிட்டனர்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, சப் இன்ஸ்பெக்டர் சந்தியா, துணை தாசில்தார் ரவி, ஆர்.ஐ. முருகேசன், வி.ஏ.ஓ. ஜனார்த்தனன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News