விபத்தில் பலியான சுமன்
மரக்காணம் அருகே இன்று காலை விபத்து: கார் மோதி தனியார் கம்பெனி ஊழியர் பலி
- சுமன் பெண் மீது மோதாமல் இருக்க மோட்டார் சைக்கிளில் பிரேக் போட்டார்.
- பிரேத பரிசோதனைக்காக புதுவை தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விழுப்புரம்:
மரக்காணம் அருகே கிழக்கு கடற்கரை சாலை ஆலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சுமன் (வயது 38) இவர் புதுவையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இன்று காலை வழக்கம் போல் சுமன் ஆலப்பாக்கத்தில் இருந்து புதுவையில் உள்ள தனியார் கம்பெனிக்கு தனது மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது ஆலப்பா க்கம் அருகே மோட்டார் சைக்கிள் வந்தபோது சாலையின் குறுக்கே ஒரு பெண் கடந்து சென்றார். அப்போது சுமன் பெண் மீது மோதாமல் இருக்க மோட்டார் சைக்கிளில் பிரேக் போட்டார். அப்போது எதிர்பாராதமாக பின்னால் வந்த அடையாளம் தெரியாத கார் வேகமாக இவரின் மீது மோதியது.
இந்த விபத்தில் சுமன் சம்பவ இடத்திலே பரிதாப மாக உயிரிழந்தார். இதைப் பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்து இது குறித்து மரக்காணம் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த மரக்காணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமனின் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக புதுவை தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.