கங்கைகொண்டான் 4 வழிச்சாலையில் விபத்து- அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி
- கோதண்டராமன் நெல்லை-மதுரை நான்கு வழிச்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
- வாகனம் மோதியதில் கோதண்டராமன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
நெல்லை:
நெல்லையை அடுத்த கங்கைகொண்டான் அருகே உள்ள மேட்டுபிராஞ்சேரி அம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் மூக்கன். இவரது மகன் கோதண்டராமன் (வயது 34).
வாகனம் மோதி பலி
இவர் நேற்று நள்ளிரவில் நெல்லை-மதுரை நான்கு வழிச்சாலையில் கங்கை கொண்டான் பகுதியில் உள்ள ஒரு ஓட்டல் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டி ருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட கோதண்டராமன் பலத்த காயம் அடைந்தார். அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கங்கைகொண்டான் போலீசார் அங்கு விரைந்து சென்று கோதண்டராமன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர்.