உள்ளூர் செய்திகள்
கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபர் கைது
- விக்னேஷ் மோட்டார் சைக்கிளில் பாளை உழவர் சந்தை பகுதியில் சென்று கொண்டிருந்தார்.
- விக்னேசிடம் இருந்த ரூ. 1,000-ஐ சுந்தர் பறித்துக் கொண்டு சென்றுவிட்டார்.
நெல்லை:
பாளை மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது30). இவர் தனது மோட்டார் சைக்கிளில் பாளை உழவர் சந்தை பகுதியில் சென்று கொண்டிருந்தார்.அப்போது அங்கு வந்த டவுனை சேர்ந்த சுந்தர் (26) என்பவர் அவரை வழிமறித்து பணம் கேட்டார். அவர் மறுக்கவே கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ. 1,000-ஐ பறித்துக் கொண்டு சென்றுவிட்டார்.
இது தொடர்பாக அவர் கொடுத்த புகாரின் பேரில் ஐகிரவுண்டு இன்ஸ்பெக்டர் தனலட்சுமி மற்றும் போலீ சார் வழக்குப்பதிவு செய்து சுந்தரை கைது செய்தனர்.