காரமடை அருகே விபத்து வாலிபர் பலி
- காரமடை மின் மயானம் அருகே சென்றபோது மோட்டார்சைக்கிள் எதிரே வந்த பஸ் மீது மோதியது.
- காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேட்டுப்பாளையம் ,
காரமடை அருகே உள்ள சிக்காரம்பாளையம் கள்ளிப்பாளையம் பகுதியைச்சேர்ந்தவர் மகாலிங்கம் (52).அதே பகுதியைச்சேர்ந்தவர் மங்களம்(32). இவர்கள் 2 பேரும் மோட்டார்சைக்கிளில் காரமடை - மேட்டுப்பாளையம் சாலையில் சென்று கொண்டு இருந்தனர். மகாலிங்கம் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றார்.
அப்போது கோவையில் இருந்து ஊட்டி நோக்கி அரசு பஸ் ஒன்று வந்தது. அந்த பஸ்சை நீலகிரி மாவட்டம் குந்தா பகுதியைச் சேர்ந்த ரவி (50) என்பவர் ஓட்டிச் சென்றார். அதில் 30-க்கும் அதிகமாக பயணிகள் இருந்தனர்.
காரமடை மின் மயானம் அருகே சென்றபோது மோட்டார்சைக்கிள் எதிர் பாராதவிதமாக நிலைதடுமாறி எதிரே வந்த பஸ் மீது மோதியது. இதில் மோட்டார்சைக்கிளில் வந்த மகாலிங்கம், மங்களம் ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர்.
பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி மங்களம் இறந்தார். மகாலிங்கம் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மகாலிங்கம் மோட்டார் சைக்கிளை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.