உள்ளூர் செய்திகள்
ஊட்டியில் மலை கிராமத்தில் சிறப்பு மருத்துவ முகாம்
- சக்கரை போன்ற நோய்க்கு மருந்து வழங்கப்பட்டது.
- படுகர் மக்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
ஊட்டி,
நீலகிரி மக்கள் மேம்பாடு மற்றும் காத்துப்பேணுதல் அறக்கட்டளை தமிழக அரசுடன் இணைந்து பல்வேறு நலத்திட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக பழங்குடியின மக்கள் வாழும் பகுதிகளில் பொருளாதாரம், உட்கட்டமைப்பு மேம்பாடு,ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை கல்வி வசதி போன்ற பல்வேறு திட்டங்களை மாநில அரசுடன் ஒன்று இணைந்து மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஊட்டிஅருகே உள்ள இத்தலார் சமுதாயக் கூடத்தில் மலை கிராமங்களில் வசிக்கும் படுகர் மக்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இந்த அறக்கட்டளையின் தலைவர் ஆதீஷ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த மருத்துவ முகாமில் இருதய நோய், கண் சிகிச்சை, பொது அறுவை சிகிச்சைக்கான ஆலோசனை, சக்கரை போன்ற நோய்க்கு மருந்து வழங்கப்பட்டது.