உள்ளூர் செய்திகள்

வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை படத்தில் காணலாம்.

ட்ரஷர் ஐலண்ட் பள்ளியில் மாணவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி

Published On 2023-04-22 13:35 IST   |   Update On 2023-04-22 13:35:00 IST
  • உளவியல் ஆலோசகர் சத்திய பிரியங்கா மாணவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கி கூறினார்.
  • நிகழ்ச்சியில் 6 முதல் முதல் 8-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

தென்காசி:

செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் மாணவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தாளாளர் டாக்டர் சேக் செய்யது அலி மற்றும் பள்ளியின் முதல்வர் சமீமா பர்வீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சித்த மருத்துவர் மற்றும் குழந்தைகள் உளவியல் ஆலோசகர் சத்திய பிரியங்கா கலந்து கொண்டு மாணவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகள் மற்றும் உடல் நலத்தை பேணி பாதுகாப்பதற்கான நெறிமுறைகள் பற்றி விளக்கி கூறினார். நிகழ்ச்சியில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள ட்ரஷர் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களுடைய சந்தேகங்களையும், ஆலோசனைகளையும் கேட்டு தெரிந்து கொண்டனர்.

Tags:    

Similar News