உள்ளூர் செய்திகள்

போத்தனூரில் குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் சிக்கிய அரசு பஸ்

Published On 2023-08-08 15:04 IST   |   Update On 2023-08-08 15:04:00 IST
  • தோண்டிய பள்ளத்தை ஊழியர்கள் சரிவர மூடவில்லை என்று தெரிகிறது.
  • பஸ்சில் பயணித்தவர்கள் இன்னொரு வாகனத்தில் ஏற்றி விடப்பட்டனர்.

குனியமுத்தூர்,

கோவை மாநகராட்சியின் பல்வேறு இடங்களில் சாலை பராமரிப்பு பணிகள், குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன்ஒருபகுதியாக கோவை போத்தனூர் ெரயில்வே மண்டபம் அருகில், குடிநீர்குழாய் பதிப்பதற்காக ரோட்டில் பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது. அப்படி தோண்டிய பள்ளத்தை ஊழியர்கள் சரிவர மூடவில்லை என்று தெரிகிறது.

இந்த நிலையில் போத்தனூரில் இருந்து துடியலூர் செல்லும் அரசு பஸ் அந்த வழியாக சென்றது. அப்போது ரோட்டின் பள்ளத்தில் பஸ் சிக்கி கொண்டது. இதில் பஸ்சின் முன்சக்கரம் பூமிக்குள் புதைந்தது.

எனவே அந்த பஸ்சில் பயணித்தவர்கள் இன்னொரு வாகனத்தில் ஏற்றி விடப்பட்டனர். அதன்பிறகு ரோட்டின் பள்ளத்தில் சிக்கிய அரசு பஸ், பொக்லைன் எந்திரம் மூலம் மீட்கப்பட்டது. போத்தனூர் ரோட்டின் பள்ளத்தில் அரசு பஸ் சிக்கியதால், அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Tags:    

Similar News