இந்தியா
null

அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பெற்ற பிறகு இந்திய முதலீட்டாளர்களுக்கு ரூ.45.57 லட்சம் கோடி இழப்பு

Published On 2025-04-08 11:01 IST   |   Update On 2025-04-08 11:07:00 IST
  • உலக அளவில் பங்குச் சந்தைகள் கடும் சரிவை சந்தித்து வருகின்றன.
  • இந்திய பங்கு சந்தையில் 10 மாதத்தில் இல்லாத சரிவு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு அதற்கு எதிரான சீனாவின் பதில் வரி என உலக வர்த்தக போர் தீவிரமடைந்து வருகிறது.

இதனை தொடர்ந்து உலக அளவில் பங்குச் சந்தைகள் கடும் சரிவை சந்தித்து வருகின்றன. இந்திய பங்கு சந்தையில் 10 மாதத்தில் இல்லாத சரிவு ஏற்பட்டு ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு ரூ. 14 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.

அமெரிக்காவில் டிரம்ப் ஆட்சிக்கு வந்ததில் இருந்து இந்திய முதலீட்டாளர்கள் சரிவை சந்தித்து வருகின்றனர். இதனால் இதுவரை இந்திய முதலீட்டாளர்களுக்கு தோராயமாக ரூ.45.57 லட்சம் கோடி சந்தை மூலதனம் இழப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 20-ந் தேதி நிலவரப்படி நமது நாட்டின் சந்தை மூலதனம் ரூ. 4,31,59,726 கோடியாக இருந்தது. இன்று ரூ.3,86,01,961 கோடியாக குறைந்துள்ளது.

மொத்தம் 517 நிறுவனங்களின் பங்குகள் கீழ் சுற்றுக்கு சரிந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

அதே சமயம், இன்று இந்திய பங்கு சந்தை சற்று உயர்வுடன் தொடங்கி வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News