பாளையில் இன்று ஆசிரியர்கள் தாக்கியதாக கூறி 3 மாணவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதி
- பிளஸ்-1 மாணவர்கள் 3 பேர் இன்று காலை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தனர்.
- மாணவர்கள் 3 பேரும் செல்போன் பயன்படுத்தியதாகவும் அதனாலேயே ஆசிரியர்கள் திட்டியதாகவும் தெரிவித்துள்ளனர்.
நெல்லை:
பாளை பகுதியில் அரசு உதவி பெறும் மேல்நிலை ப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் பிளஸ்-1 மாணவர்கள் 3 பேர் இன்று காலை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தனர்.
அப்போது அவர்களிடம் அங்கு உள்ள புறக்காவல் நிலையத்தில் இருந்த போலீசார் விசாரித்ததில், தங்களை ஆசிரியர்கள் தாக்கியதாக கூறினர்.இது தொடர்பாக பாளை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேர்வில் தோல்வியடைந்ததால் ஆசிரியர்கள் தங்களை தாக்கியதாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் 3 பேரும் கூறினர்.
ஆனால் பள்ளி நிர்வாகம் கூறுகையில், மாணவர்கள் 3 பேரும் பள்ளி விதிகளை மீறி செல்போன் பயன் படுத்தியதாகவும், வீடி யோக்கள் பதிவிட்டதாகவும், அதன் காரணத்தினாலேயே ஆசிரியர்கள் அந்த மாணவர்களை திட்டியதாகவும் தெரிவித்துள்ளனர்.
இரு தரப்பினரும் கூறும் தகவல்களின் உண்மை தன்மை குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.