உள்ளூர் செய்திகள்
பள்ளி வாகனங்களை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்த காட்சி.

நாமக்கல் மாவட்டத்தில் பள்ளி வாகனங்களை கலெக்டர் ஆய்வு

Published On 2022-06-02 08:11 GMT   |   Update On 2022-06-02 08:11 GMT
நாமக்கல் மாவட்டத்தில் பள்ளி வாகனங்களை கலெக்டர் ஆய்வு செய்தார்
நாமக்கல்:

கோடை விடுமுறைக்கு பின்னர் இந்த மாதம்  பள்ளிகள் திறக்கப்பட இருப்பதால், அதற்கு முன்பாக அனைத்து பள்ளி வாகனங்களையும் ஆய்வு செய்ய அரசு உத்தரவிட்டது. 

இதை தொடர்ந்து , நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிக் கல்வி வாகனங்கள் நாமக்கல் ஆயுதப்படை மைதானத்தில் ஆய்வு செய்யப்பட்டன. 

இதில் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் கலந்துகொண்டு வாகனத்தில் பிரேக் சரியாக உள்ளதா? பாதுகாப்பு கருவிகள், அவசர வழிகள் அமைக்கப்பட்டுள்ளனவா? , வாகன படிக்கட்டுகள் சரியாக உள்ளதா? என ஆய்வு செய்தார். அப்போது ஓட்டுநர்கள் செல்போன் பேசி கொண்டு வாகனம் இயக்கக்கூடாது. மது அருந்த கூடாது என அறிவுறுத்தப்பட்டன.

 மேலும், தீயணைப்புத் துறையினா் மூலம் தீத்தடுப்பு மற்றும் முதலுதவி தொடா்பான நடவடிக்கைகள் குறித்த செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட்டன. 

 ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியர் மஞ்சுளா, வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகேசன், தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன், டிஎஸ்பி சுரேஷ், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் உமாமகேஸ்வரி, சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News