தமிழ்நாடு செய்திகள்
சிவகங்கையில் விஷவாயு தாக்கி 2 பேர் பலி
- மொலாசஸ் என்பது சர்க்கரை தயாரிக்கும்போது கிடைக்கும் ஒரு வகை பாகு ஆகும்.
- விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் உயிரிழந்தது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் படமாத்தூரில் சர்க்கரை ஆலையில் மொலாசஸ் சேமிப்பு டேங்கை 2 தொழிலாளர்கள் சுத்தம் செய்தனர். மொலாசஸ் என்பது சர்க்கரை தயாரிக்கும்போது கிடைக்கும் ஒரு வகை பாகு ஆகும்.
அப்போது விஷவாயு தாக்கியதில் சிவகங்கையை சேர்ந்த பொன்னழகு, கரும்பாவூர் கிராமத்தை சேர்ந்த மோகனசுந்தரம் ஆகியோர் உயிரிழந்தனர்.
விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழந்தது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.