உள்ளூர் செய்திகள்
குன்னூர் பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா
குண்டத்தில் முதலில் தலையில் கரகம் ஏந்தியவர்கள் இறங்கினர் பின் பக்தர்கள் ஒவ்வொருவராக குண்டத்தில் இறங்கினர்கள்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் குன்னூர் பெரிய வண்டிச்சோலை பகுதியில் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இங்கு வருடந்தோறும் மே மாதத்தில் 5 நாட்கள் திருவிழா நடைபெறும்.
கடந்த 2 ஆண்டுகள் திருவிழா நடைபெறாத நிலையில் இந்த ஆண்டு 108-ம் ஆண்டு உற்சவ திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவில் இப்பகுதி மக்கள் மட்டும் இன்றி வெளியூரை சேர்ந்த ஏராளமான பக்தர்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நேற்று பூ குண்ட திருவிழா நடந்தது. இந்த குண்டத்தில் முதலில் தலையில் கரகம் ஏந்தியவர்கள் இறங்கினர் பின் பக்தர்கள் ஒவ்வொருவராக குண்டத்தில் இறங்கினர்கள்.குண்டத்தில் குழந்தைகள் பெரியவர்கள் பெண்கள் மத சார்பற்று பலர் இதில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.