உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நீலகிரியில் போட்டியிட 1,382 பேர் மனுதாக்கல்

Published On 2022-02-05 15:56 IST   |   Update On 2022-02-05 15:56:00 IST
ஊட்டி நகராட்சியில் 212 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் 4 நகராட்சிகளில் 108 வார்டுகள், 11 பேரூராட்சிகளில் 186 வார்டுகள் என மொத்தம் 294 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 19-ந்தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. வேட்புமனுதாக்கல் கடந்த 28-ந்தேதி தொடங்கியது. 15 இடங்களில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வேட்பு மனுக்களை பெற்றனர்.

நேற்று கடைசி நாள் என்பதால் அரசியல் கட்சி வேட்பா ளர்கள், சுயேட்சை வேட்பா ளர்கள் வேட்புமனுதாக்கலில் தீவிரம் காட்டினர். தங்களது வார்டுகளில் போட்டி போட்டுக்கொண்டு வேட்புமனுதாக்கல் செய்தனர். ஊட்டி நகராட்சி அலுவலகம் உள்பட 15 இடங்களில் போலீசார் தடுப்புகள் வைத்து அடைத்து பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

நேற்று ஒரே நாளில் ஊட்டி நகராட்சியில் 48 பேர், குன்னூர் நகராட்சியில் 70 பேர், கூடலூர் நகராட்சியில் 52 பேர், நெல்லியாளம் நகராட்சியில் 101 பேர் என மொத்தம் 271 பேர் வேட்புமனுதாக்கல் செய்தனர். அதிகரட்டி பேரூராட்சியில் 55 பேர், பிக்கட்டி பேரூராட்சியில் 40 பேர், தேவர்சோலை பேரூராட்சியில் 27 பேர், உலிக்கல் பேரூராட்சியில் 63 பேர், ஜெகதளா பேரூராட்சியில் 52 பேர் வேட்புமனுதாக்கல் செய்தனர்.

கேத்தி பேரூராட்சியில் 45 பேர், கீழ்குந்தா பேரூராட்சியில் 5 பேர், கோத்தகிரி பேரூராட்சியில் 83 பேர், நடுவட்டம் பேரூராட்சியில் 21 பேர், ஓவேலி பேரூராட்சியில் 28 பேர், சோலூர் பேரூராட்சியில் 42 பேர் என மொத்தம் 508 பேர் மனுதாக்கல் செய்தனர். கடைசி நாளான நேற்று மட்டும் மொத்தம் 779 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.

நேற்றுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது. தற்போது நீலகிரி மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சி, 11 பேரூராட்சிகளில் 1,382 பேர் வேட்புமனுதாக்கல் செய்துள்ளனர். ஊட்டி நகராட்சியில் போட்டியிட 212 பேர், குன்னூர் நகராட்சியில் 146 பேர், கூடலூர் நகராட்சியில் 121 பேர், நெல்லியாளம் நகராட்சியில் 122 பேரும் மனுதாக்கல் செய்துள்ளனர். 

அதிகரட்டி பேரூ ராட்சியில் 76 பேர், பிக்கட்டி பேரூராட்சியில் 53 பேர், தேவர்சோலை பேரூராட்சியில் 78 பேர், உலிக்கல் பேரூராட்சியில் 76 பேர், ஜெகதளா பேரூராட்சியில் 71 பேர், கேத்தி பேரூராட்சியில் 76 பேர், கீழ்குந்தா பேரூராட்சியில் 59 பேர், கோத்தகிரி பேரூராட்சியில் 126 பேர், நடுவட்டம் பேரூராட்சியில் 46 பேர், ஓவேலி பேரூராட்சியில் 68 பேர், சோலூர் பேரூராட்சியில் 52 பேர் என மொத்தம் 1,382 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். 

இன்று இந்த மனுக்கள் மீது பரிசீலனை செய்யப்பட்டு, சில நாட்களில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

Similar News