உள்ளூர் செய்திகள்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்- நீலகிரியில் 13 இடங்களில் வாக்குகள் எண்ணிக்கை
நீலகிரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. ஊட்டி, குன்னூர், கூடலூர், நெல்லியாளம் ஆகிய 4 நகராட்சிகளில் 108 இடங்கள், 11 பேரூராட்சிகளில் 186 இடங்கள் என 294 வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கு தேர்தல் நடக்கிறது. வேட்பு மனுத்தாக்கல் நாளையுடன் நிறைவு பெறுகிறது.
இதையடுத்து தேர்தல் நடத்தவும், வாக்கு எண்ணிக்கை எண்ணும் பணியை மேற்கொள்ளவும் அதிகாரிகள் கவனம் செலுத்தி வருகிறார்கள். அதன்படி நீலகிரி மாவட்டத்தில் 13 இடங்களில் வாக்குகள் எண்ணப்பட உள்ளன.
அதன் விவரம் வருமாறு:-
ஊட்டி நகராட்சி தேர்தல் பதிவாகும் வாக்குகள் ஊட்டி ரெக்ஸ் மேல்நிலைப்பள்ளியில் எண்ணப்படுகின்றன. குன்னூர் நகராட்சி வாக்குகள் குன்னூர் புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி யிலும், நெல்லியாளம் நகராட்சி வாக்குகள் பந்தலூர் பஜார் புனித பிரான்சிஸ் சேவியர் ஆரம்ப பள்ளி கட்டிடத்திலும் எண்ணப்படுகின்றன.
கூடலூர் நகராட்சி மற்றும் ஓவேலி பேரூராட்சி வாக்குகள் கூடலூர் ஓவேலி சாலை அரசு மேல்நிலைப்பள்ளியிலும், நடுவட்டம் பேரூராட்சி வாக்குகள் நடுவட்டம் அரசு உயர்நிலைப்பள்ளியிலும், தேவர்சோலை பேரூராட்சி வாக்குகள் தேவர்சோலை அரசு மேல்நிலைப்பள்ளியிலும் எண்ணப்படுகின்றன.
பிக்கட்டி பேரூராட்சி, கீழ்குந்தா பேரூராட்சி வாக்குகள் மஞ்சூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், உலிக்கல் பேரூராட்சி வாக்குகள் சேலாஸ் சிறுமலர் ஆரம்ப பள்ளியிலும், ஜெகதளா பேரூராட்சி வாக்குகள் அருவங்காடு ஜெகதளா பேரூராட்சி அலுவலக கடடிடத்திலும், கேத்தி பேரூராட்சி வாக்குகள் சாந்தூர் சி.எஸ்.ஐ. மேல் நிலைப்பள்ளியிலும், கோத்தகிரி பேரூராட்சி வாக்குகள் கோத்தகிரி மாவட்ட ஆட்சியர் பயிற்சி மையத்திலும், அதிகரட்டி பேரூராட்சி வாக்குகள் அதிகரட்டி அரசு மேல்நிலைப் பள்ளியிலும், சோலூர் பேரூராட்சி வாக்குகள் நாகர்தனை அரசு மேல்நிலைப் பள்ளியிலும் எண்ணப்படுகின்றன.