உள்ளூர் செய்திகள்
ஆஸ்திரேலிய எம்.எல்.ஏ.வுக்கு உற்சாக வரவேற்பு

கோத்தகிரி: சொந்த ஊருக்கு வந்த ஆஸ்திரேலிய எம்.எல்.ஏ.வுக்கு உற்சாக வரவேற்பு

Published On 2022-01-31 15:57 IST   |   Update On 2022-01-31 15:57:00 IST
ஆஸ்திரேலியாவில் எம்.எல்.ஏ.வாக பதவி வகிக்கும் ஒருவர் நீலகிரியில் உள்ள தனது சொந்த ஊருக்கு வருகை தந்தார்.
ஊட்டி:

 நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள திம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகதீஷ்கிருஷ்ணன் (வயது 48). டாக்டர்.  இவர் மேற்கு ஆஸ்திரேலிய மாகாணம், ரிவர்டன் பகுதியில் வேலை செய்து வருகிறார். 

இந்த நிலையில் அங்கு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ரிவர்டன்  தொகுதியில் தொழிலாளர் கட்சி  சார்பில்  போட்டியிட்டார். அதில் அவர் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டு கடந்த ஆண்டு மே மாதம் பொறுப்பேற்று கொண்டார். 

படுகர் சமுதாயத்தை சேர்ந்த இவர் பொறுப்பேற்று கொண்டபின் முதல் வெளிநாட்டு எம்.எல்.ஏ என்ற பெருமையை பெற்றார். இவர் தனது சொந்த ஊரான நீலகிரி மாவட்டம், கோத்தகிரிக்கு முதல்முறையாக வருகை தந்தார். 

அவருக்கு 19 ஊர் படுகர் இன மக்கள் சார்பில் அதன் தலைவர் ராமா கவுடர் தலைமையில் கோத்தகிரி காமராஜர் சதுக்கத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர்  கன்னேரிமுக்கு பகுதியில் இருந்து அவரது இல்லம் வரை ஊர்வலமாக பேண்ட் வாத்தியங்கள் முழங்க படுகர் இன மக்களின் பாரம்பரிய நடனத்துடன் அழைத்துச் சென்றனர்.  4 சீமை பொதுமக்கள் சார்பில் பொன்னாடை அணிவிக்கப்பட்டது.

Similar News