உள்ளூர் செய்திகள்
ஊட்டியில் குடியரசு தினவிழா - மாவட்ட வருவாய் அதிகாரி தேசிய கொடி ஏற்றி வைத்தார்
ஊட்டியில் இன்று நடந்த குடியரசு தினவிழாவில் பழங்குடியின மக்களின் ஒரு நடன நிகழ்ச்சி மட்டும் நடந்தது
ஊட்டி:
நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் 73-வது குடியரசு தின விழா இன்று ஊட்டி அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடந்தது. விழாவில் மாவட்ட வருவாய் அதிகாரி கீர்த்தி பிரியதர்ஷினி பங்கேற்று தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத் தினார்.
தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதை நடந்தது. பின்னர் சிறப்பாக பணிபுரிந்த போலீசார் 10 பேருக்கும், தீயணைப்பு மீட்பு பணித்துறையைச் சேர்ந்த 22 பேருக்கு சான்றிதழ்களை வருவாய் அதிகாரி கீர்த்தி பிரியதர்ஷினி வழங்கினார்.
மேலும் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவத் துறை அதிகாரிகளுக்கும் அவர் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இன்று நடந்த விழாவில் பல்வேறு துறைச் சேர்ந்த மொத்தம் 94 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களை அவர் வழங்கி கவுரவித்தார்.
இன்று விழாவில் பழங்குடியின மக்களின் ஒரு நடன நிகழ்ச்சி மட்டும் நடந்தது. கொரோனா பரவலை கருத்தில் கொண்டு பள்ளி, கல்லூரி மாணவ& மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறவில்லை. இதேபோல விழாவில் பங்கேற்க பார்வையாளர்கள், பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
விழாவுக்கு வந்த அரசு அதிகாரிகள், ஊழியர்கள் முக கவசம் அணிந்து பங்கேற்றனர். முன்னதாக அவர்களின் உடல் வெப்பநிலை பரி சோதிக்கப்பட்டது. அதன்பிறகே விழா மைதானத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். அனைவரும் முக கவசம் அணிந்து வந்திருந்தனர்.