செய்திகள்
குளித்தலை அருகே லாட்டரி சீட்டுகளை விற்ற 2 பேர் கைது
குளித்தலை அருகே லாட்டரி சீட்டுகளை விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குளித்தலை:
குளித்தலை அருகே உள்ள கோட்டமேடு, குட்டப்பட்டி பகுதிகளில் குளித்தலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குட்டப்பட்டி நால்ரோடு அருகே சந்தேகத்துக்கிடமாக நின்ற 2 பேரை மடக்கி பிடித்தனர். விசாரணையில், குளித்தலை எழுநூற்றுமங்கலம் பகுதியை சேர்ந்த கோபிநாத் (வயது 35), சந்திரசேகர் (40) என்பதும், அவர்கள் 2 பேரும் அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை போலியாக அச்சடித்து விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், விற்பனைக்காக வைத்திருந்த லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.1,300 பறிமுதல் செய்யப்பட்டது.