தமிழ்நாடு செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு- குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று முதல் அமல்

Published On 2026-01-18 08:16 IST   |   Update On 2026-01-18 08:16:00 IST
  • சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
  • இது வரும் ஜனவரி 30-ஆம் தேதி நள்ளிரவு வரை தொடரும்.

இந்தியாவின் 77-வது குடியரசு தின விழாவை (ஜனவரி 26, 2026) முன்னிட்டு, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இன்று (ஜனவரி 18) முதல் இந்தச் சிறப்புப் பாதுகாப்பு நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.

அதன்படி, விமான நிலையத்தின் வெளிப்பகுதி முதல் விமானங்கள் நிற்கும் பகுதி வரை ஐந்து அடுக்கு பாதுகாப்பு முறை இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இது வரும் ஜனவரி 30-ஆம் தேதி நள்ளிரவு வரை தொடரும்.

குடியரசு தினத்திற்கு முந்தைய தினங்களான ஜனவரி 24, 25 மற்றும் ஜனவரி 26 ஆகிய மூன்று நாட்களில் பாதுகாப்பு மேலும் தீவிரப்படுத்தப்பட்டு, ஏழு அடுக்கு பாதுகாப்பாக உயர்த்தப்படும்.

பாதுகாப்புச் சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால், பயணிகள் சிரமத்தைத் தவிர்க்க முன்னதாகவே விமான நிலையம் வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்

Tags:    

Similar News