தமிழ்நாடு செய்திகள்

#kamalHaasan | அமெரிக்க அதிபர் டிரம்ப்-க்கு கமல் ஹாசன் எம்.பி. கடிதம்

Published On 2026-03-07 20:24 IST   |   Update On 2026-03-07 20:24:00 IST
  • அமெரிக்காவின் அனுமதி தேவையில்லை என்று மத்திய அரசு தெரிவித்தது.
  • உங்கள் திறமைக்கு ஏற்றவாறு உங்கள் சொந்த வேலையைச் செய்யுங்கள்.

ஈரான், அமெரிக்கா-இஸ்ரேல் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி பாதையில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இதன் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் வநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்க ஒரு மாத காலத்திற்கு அனுமதி அளிப்பதாக அமெரிக்கா அறிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்க அதிபரின் தலையீட்டை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. போட்டித்தன்மை வாய்ந்த விலைகளை வழங்கும் எந்தவொரு இடத்தில் இருந்தும் இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கி வருவதாக மத்திய அரசு தெரிவித்தது. மேலும், எண்ணெய் வாங்கும் விவகாரத்தில் அமெரிக்காவின் அனுமதி தேவையில்லை என்றும் மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்தது.

இந்த நிலையில், ரஷியாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்கும் விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீட்டை கமல் ஹாசன் எம்.பி. கண்டித்துள்ளார். இது குறித்து எக்ஸ் தளம் வாயிலாக கமல் ஹாசன் எழுதியிருக்கும் பதிவில் (கடிதம்), "இந்திய மக்களாகிய நாங்கள், ஒரு சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட தேசத்தை சேர்ந்தவர்கள். தொலைதூர வெளிநாட்டுக் கரைகளில் இருந்து வரும் உத்தரவுகளை நாங்கள் இனி ஏற்பதில்லை.

உங்கள் திறமைக்கு ஏற்றவாறு உங்கள் சொந்த வேலையைச் செய்யுங்கள். இறையாண்மை கொண்ட நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர மரியாதை மட்டுமே நீடித்த உலகளாவிய அமைதிக்கான ஒரே அடித்தளம். உங்கள் நாட்டிற்கும் அதன் மக்களுக்கும் அமைதியையும் செழிப்பையும் நாங்கள் விரும்புகிறோம்," என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News