தமிழ்நாடு செய்திகள்
மோடியின் தந்திரத்தை பின்பற்றத் தொடங்கிவிட்டார் இபிஎஸ்- சி.பி.ஐ.எம் பெ.சண்முகம்
- 2014 இல் மோடி அவர்கள் எவ்வளவோ வாக்குறுதிகளை வாரி வழங்கினார்.
- தேர்தல் தொடர்பான அவருடைய வாக்குறுதிகள் வெளிப்படுத்துகின்றன.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநிலத் தலைவர் பெ. சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
2014 இல் மோடி அவர்கள் எவ்வளவோ வாக்குறுதிகளை வாரி வழங்கினார். அதில் முக்கியமானது "ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடுவேன்" என்றது.
ஆட்சியைப் பிடிக்க ஆயிரம் பொய் சொல்லலாம் என்ற மோடியின் தந்திரத்தை எடப்பாடி பழனிச்சாமியும் பின்பற்றத் தொடங்கிவிட்டார் என்பதை தான் தேர்தல் தொடர்பான அவருடைய வாக்குறுதிகள் வெளிப்படுத்துகின்றன.
தமிழக மக்களே, எடப்பாடி பழனிசாமி இப்போது மோடியுடன் சேர்ந்து வருகிறார் உஷார்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.