வாரிசு அரசியல்: சுதீசுக்கு மாநிலங்களவை எம்.பி.யாக தகுதி இல்லையா? - #Premalatha ஆவேசம்
- மாநிலங்களவை எம்.பி. சீட் என்ற தே.மு.தி.க.வின் நீண்ட நாள் கனவு நனவாகி இருக்கிறது.
- சுதீஷ் தொடங்கி கட்சியில் உள்ள அனைவரும் எனக்கு சமம் தான்.
தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.விற்கு ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கப்பட்டது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* மாநிலங்களவை எம்.பி. சீட் என்ற தே.மு.தி.க.வின் நீண்ட நாள் கனவு நனவாகி இருக்கிறது.
* தே.மு.தி.க.விற்கு முன்னதாகவே மாநிலங்களவை எம்.பி. சீட் கிடைத்திருக்க வேண்டும். சற்று காலதாமதமாக கிடைத்துள்ளது.
* 2024-ல் தே.மு.தி.க.விற்கு மாநிலங்களவை எம்.பி. சீட் கொடுத்திருக்க வேண்டியது, அது நடக்காமல் போனது.
* மாநிலங்களவை எம்.பி.யாக இந்திய அளவில் ஜனநாயக கடமையாற்ற உள்ள சுதீசுக்கு வாழ்த்துகள்.
வாரிசு அரசியல் தொடர்பான கேள்விக்கு,
* சுதீஷ் கட்சியின் ஆரம்பத்தில் இருந்து உழைக்கவில்லையா?
* தே.மு.தி.க. தொண்டர்களின் விருப்பத்தின்பேரில் விஜயபிரபாகரன் கடந்த தேர்தலில் போட்டியிட்டார்.
* சுதீஷ், விஜய பிரபாகரன் தவிர வேறு யார் எங்கள் குடும்பத்தில் இருந்து கட்சியில் இருக்கிறார்கள்?
* கட்சியின் தொடக்கம் முதல் உழைத்த சுதீசுக்கு மாநிலங்களவை எம்.பி.யாக தகுதி இல்லையா?
* விமர்சிப்பவர்கள் விமர்சித்துக்கொண்டே தான் இருப்பார்கள். சுதீஷ் தொடங்கி கட்சியில் உள்ள அனைவரும் எனக்கு சமம் தான்.
இவ்வாறு அவர் கூறினார்.