null
ஓசூர் விமான நிலையத் திட்டத்திற்கு மீண்டும் மத்திய அரசு தடை
- ஓசூரைச் சுற்றியுள்ள வான்பகுதி ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் கட்டுப்பாட்டில் உள்ளது.
- விவசாய நிலங்களை விட்டுத்தர முடியாது என அவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
ஓசூர் சர்வதேச விமான நிலையத் திட்டத்திற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் மீண்டும் ஒப்புதல் அளிக்க மறுத்துள்ளது, இது, தமிழக அரசியல் மற்றும் தொழில் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓசூர் பகுதியில் விமான நிலையம் அமைப்பதற்கான வான்வெளி அனுமதியை வழங்க முடியாது என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஓசூரைச் சுற்றியுள்ள வான்பகுதி ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு ராணுவ மற்றும் சோதனை விமானங்கள் பறப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படுவதால், பயணிகள் விமானப் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்க முடியாது என்று பாதுகாப்புத் துறை அமைச்சகம் கடிதம் மூலம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, ஒருபுறம் மத்திய அரசின் நிராகரிப்பு இருந்தாலும், மறுபுறம் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக ஓசூர் மற்றும் சூளகிரி பகுதிகளில் உள்ள 12 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராடி வருகின்றனர்.
விவசாய நிலங்களை விட்டுத்தர முடியாது என அவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.