தமிழ்நாடு செய்திகள்

திருச்சி ரெயில்வே நுழைவாயிலில் தமிழில் எழுதப்பட்ட இந்திப் பெயர் அகற்றம்

Published On 2026-03-04 17:19 IST   |   Update On 2026-03-04 17:19:00 IST
  • நுழைவு வாயிலுக்கு " கர்தவ்ய த்வார்" என தெற்கு ரெயில்வே இந்தியில் பெயர் வைத்துள்ளது
  • "கர்தவ்ய த்வார்" என்றால் தமிழில் " கடமையின் நுழைவுவாயில்" என்று பொருள்.

புதியதாக கட்டி முடிக்கப்பட்ட திருச்சி மண்டல ரெயில்வே அலுவலகத்தின் நுழைவு வாயிலுக்கு " கர்தவ்ய த்வார்" என தெற்கு ரெயில்வே இந்தியில் பெயர் வைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

"கர்தவ்ய த்வார்" என்றால் தமிழில் "கடமையின் நுழைவுவாயில்" என்று பொருள். தெற்கு ரெயில்வேவின் இந்த செயலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இதையடுத்து திருச்சி மண்டல ரயில்வே மேலாளர் அலுவலக நுழைவு வாயிலில் தமிழில் எழுதப்பட்ட இந்திப் பெயர் அகற்றபட்டுள்ளது.

Tags:    

Similar News