தமிழ்நாடு செய்திகள்
இ.பி.எஸ் தலைமையில் அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
- மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
- டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்த பிறகு இபிஎஸ் ஆலோசனை.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.
மாநிலங்களவை சீட், சட்டமன்ற தேர்தல் பணிகள், தொகுதி பங்கீடு, கூட்டணி கட்சியினருக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் இணைந்து பணியாற்றுவது தொடர்பாக மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்த பிறகு அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் இபிஎஸ் ஆலோசனை நடத்துகிறார்.