தமிழ்நாடு செய்திகள்

TN Assembly Election: தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி உறுதி?

Published On 2026-03-04 12:59 IST   |   Update On 2026-03-04 12:59:00 IST
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ப.சிதம்பரம், செல்வப்பெருந்தகை ஆகியோர் சந்தித்து பேசினர்.
  • பேச்சுவார்த்தை குறித்த தகவல்களை ப.சிதம்பரம் கட்சி தலைமைக்கு தெரிவித்தார்.

தி.மு.க. - காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வருகிறது.

முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று சந்தித்து தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தை குறித்த தகவல்களை ப.சிதம்பரம் கட்சி தலைமைக்கு தெரிவிப்பார் என்றும் அதைத்தொடர்ந்து கட்சி மேலிடம் முடிவு எடுக்கும் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் காங்கிரசுக்கு 28 தொகுதிகள், 1 மாநிலங்களவை இடம் என்பது உறுதியாகி இருப்பதாக கூறப்படுகிறது.

இதையடுத்து காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் இன்று மாலை சென்னை வருவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும், தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் நீடிப்பது உறுதியாகி இருப்பதாக டெல்லி வட்டார தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

Similar News