சினிமா செய்திகள்

துபாயில் கார் ரேஸர் அஜித்தை சந்தித்த திரைப்பிரபலங்கள்

Published On 2026-01-18 09:03 IST   |   Update On 2026-01-18 09:03:00 IST
அஜித்தை துபாய் ரேஸிங் களத்தில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதி சந்திப்பு.

நடிகர் அஜித் குமார் திரைப்படங்களை தாண்டி கார் ரேஸிங் மீது காதல் கொண்டு பல சர்வதேச போட்டிகளில் அண்மைக் காலமாக கலந்துகொண்டு வருகிறார்.

ஸ்பெயின் மற்றும் அபுதாபி ஆகிய இடங்களில் நடைபெற்ற ரேஸிங் போட்டிகளில் அவர் பங்கேற்று கவனம் ஈர்த்து வருகிறார்.

அபுதாபி ரேஸிங் களத்தில் திரைப்பிரபலங்கள் பலரும் அஜித்தை நேரில் சந்தித்து வருகின்றனர்.

அந்த வகையில், சமீபத்தில் இசையமைப்பாளர் அனிருத் அஜித்தை நேரில் சென்று சந்தித்தார். இதேபோல், லீலாவும் அஜித்தை சந்தித்த புகைப்படங்கள் வைரலாகின.

இந்நிலையில், அஜித்தை துபாய் ரேஸிங் களத்தில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதி, ஜி.வி.பிரகாஷ், சிபிராஜ் ஆகியோர் சந்தித்துள்ளனர்.

அஜித்தின் 'ரேஸிங்' பயணத்தை மையமாக வைத்து இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கும் ஆவணப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

நடிகர் சிபிராஜ் அஜித்தை கார் ரேஸ் ட்ராக்கில் சந்தித்து இருந்த வீடியோ வைரல் ஆனது.

Tags:    

Similar News