செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

வேளாங்கண்ணி தேவாலயத்தில் முதலமைச்சர் பிரார்த்தனை

Published On 2020-12-09 02:49 GMT   |   Update On 2020-12-09 03:51 GMT
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி தேவாலயத்தில் நடைபெற்ற பிரார்த்தனையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.
நாகை:

சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று மத்திய குழு அதிகாரிகள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

இந்த சந்திப்புக்கு பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, புயல் மற்றும் மழை வெள்ள சேதங்களை பார்வையிடுவதற்காக காரில் கடலூருக்கு புறப்பட்டார்.

கடலூர் மாவட்டத்தில் புயல், மழை வெள்ள சேதங்களை பார்வையிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இரவில் நாகப்பட்டினத்திற்கு புறப்பட்டு சென்றார்.

இன்று முற்பகலில் திருவாரூர், நன்னிலம் பகுதியிலும், பிற்பகலில் மயிலாடுதுறை, சீர்காழி பகுதியிலும் சேதப்பகுதிகளை பார்வையிட உள்ளார்.

இந்நிலையில் இன்று காலை நாகை மாவட்டம் வேளாங்கண்ணி தேவாலயத்தில் நடைபெற்ற பிரார்த்தனையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.

பிரார்த்தனையில் பங்கேற்ற முதலமைச்சருக்கு தேவாலயம் சார்பில் வேளாங்கண்ணி மாதா சொரூபம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News