செய்திகள்

5 நோயாளிகள் உயிரிழந்த விவகாரம் - அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

Published On 2019-05-09 10:09 GMT   |   Update On 2019-05-09 10:09 GMT
மதுரை மருத்துவமனையில் 5 நோயாளிகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. #MaduraiGovernmenthospital #HighCourt
மதுரை:

மதுரையில் நேற்று முன்தினம் இடி-மின்னலுடன் மழை பெய்தது. அப்போது பல இடங்களில் மின்சாரம் தடைபட்டது. ராஜாஜி அரசு மருத்துவமனையிலும் மின் இணைப்பு துண்டானது. இதனால் ஆக்சிஜன் கிடைக்காமல் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த 5 பேர் இறந்தனர்.

மின்தடை ஏற்பட்டதும் ஜெனரேட்டர் உடனே இயக்கப்படாததால் தான் அவசர சிகிச்சை பிரிவில் இருந்த நோயாளிகள் இறந்துள்ளதாக நோயாளிகளின் உறவினர்கள் புகார் தெரிவித்தனர். ஆனால், இதனை அரசு ஆஸ்பத்திரி நிர்வாகம் மறுத்துள்ளது.

அவசர சிகிச்சை பிரிவில் இருந்த 5 நோயாளிகள் ஏற்கனவே கவலைக்கிடமாக இருந்துள்ளனர். சிகிச்சை பலனின்றி தான் அவர்கள் இறந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மதுரை மருத்துவமனையில் 5 நோயாளிகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 

மேலும், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்து நிபுணர் குழு அமைப்பது குறித்தும் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு உள்ளது.

தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை வரும் 29-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. #MaduraiGovernmenthospital #HighCourt
Tags:    

Similar News