செய்திகள்

குடும்பத்தை சீரழித்த குடிப்பழக்கம் - மனைவி இறந்த 2 நாளில் கணவரும் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2019-03-30 16:41 IST   |   Update On 2019-03-30 16:41:00 IST
மனைவி இறந்த 2 நாளில் கணவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மதுரை:

மதுரை எழுமலை சந்தன மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பிச்சைபாண்டி (வயது 33). இவரது மனைவி பாரதி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

பிச்சை பாண்டிக்கு குடிப்பழக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக கணவன் -மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு எழுந்தது.

இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த பாரதி கடந்த 23-ந் தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பிச்சை பாண்டி மனதை மிகவும் பாதித்தது.

மனைவியின் சாவுக்கு குடிப்பழக்கம் காரணமாகி விட்டதே? என்று மனவேதனை அடைந்த பிச்சைபாண்டி மனைவி இறந்த 2 நாளில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார்.

இதையடுத்து உறவினர்கள் அவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பிச்சைப்பாண்டி நேற்று பரிதாபமாக இறந்தார்.

இது தொடர்பாக எழுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
Tags:    

Similar News