செய்திகள்

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயர் சூட்டக் கோரி விமானத்தில் ஆர்ப்பாட்டம்

Published On 2019-03-30 15:26 IST   |   Update On 2019-03-30 15:39:00 IST
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயர் சூட்டவேண்டும் என வலியுறுத்தி தனியார் விமானத்தில் ஆர்ப்பாட்டம் செய்தவர்களை போலீசார் கைது செய்தனர். #Madurai #Protestinplane
மதுரை:

சென்னையில் இருந்து மதுரை நோக்கி தனியார் விமானம் இன்று புறப்பட்டு சென்றது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் அதில் பயணம் செய்த பாரதிய பார்வர்ட் பிளாக் கட்சியை சேர்ந்த சிலர் திடீரென எழுந்து நின்றனர்.

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயரை வைக்க வேண்டும் என  அவர்கள் கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, மதுரை விமான நிலையத்தில் இறங்கிய அவர்களை போலீசார் கைது செய்தனர். #Madurai #Protestinplane
Tags:    

Similar News