செய்திகள்

ஏழைகளுக்கு பயன்படாத உதவாக்கரை பட்ஜெட்- முக ஸ்டாலின் கருத்து

Published On 2019-02-08 07:35 GMT   |   Update On 2019-02-08 07:35 GMT
தமிழக சட்டசபையில் துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தது உதவாக்கரை பட்ஜெட் என்று மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். #TNBudget #OPS #MKStalin
சென்னை:

தமிழக சட்டசபையில் இன்று துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், 2019- 2020ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-



துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தது உதவாக்கரை பட்ஜெட்.  ஏழை, எளிய மக்களுக்கு பயன்படாத வகையில் தமிழக பட்ஜெட் அமைந்துள்ளது.

பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் சொன்னதையை திரும்ப திரும்ப கூறிக்கொண்டிருந்தார். நிதி ஒதுக்கீட்டை விளம்பரத்திற்காக செய்து விட்டு அதை இந்த அரசு அமல்படுத்தவில்லை.

உள்ளாட்சி தேர்தலை நடத்த இந்த அரசு முன் வரவில்லை. உள்ளாட்சிக்கான நிதியை மத்திய அரசு வழங்காததற்கு உள்ளாட்சித் தேர்தலை நடத்தாததே காரணம்.

வேலைவாய்ப்புகளை பெருக்கும் வகையில் எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.

விவசாயிகளை பற்றி இந்த அரசு கவலைப்படவில்லை. வாங்கிய  கடனுக்கான வட்டியை செலுத்தக்கூடிய வகையில் பட்ஜெட் உள்ளது.

விவசாயிகளுக்காகவும், அரசின் வருவாயை பெருக்குவதற்காகவும் பட்ஜெட்டில் எந்த திட்டமும் இல்லை.

கொடநாட்டில் கொள்ளையடித்தது போல தமிழகத்தை கொள்ளையடிக்கும் வகையில் பட்ஜெட் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.   #TNBudget #OPS #MKStalin
Tags:    

Similar News