செய்திகள்

திருமண ஆசை வார்த்தை கூறி 10-ம் வகுப்பு மாணவி கடத்தல்: வாலிபர் கைது

Published On 2019-02-07 09:32 IST   |   Update On 2019-02-07 09:32:00 IST
ஈரோடு அருகே திருமண ஆசை வார்த்தை கூறி 10-ம் வகுப்பு மாணவியை கடத்திய வழக்கில் வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கை செய்தனர்.
ஈரோடு:

ஈரோடு மாவட்டம் காஞ்சிகோவில் மேல்வரலசாங் காட்டை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் நந்தகுமார் (வயது 19). கட்டிடத் தொழிலாளி.

அந்த பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்ட நந்தகுமார் அவருக்கு ஆசை வார்த்தை கூறினார். நாம் திருமணம் செய்து கொள்ளலாம் சந்தோ‌ஷமாக வாழலாம் என ஆசை வார்த்தைகளை அள்ளி தெளித்தார்.

பிறகு அவரை நந்தகுமார் கடத்தி சென்று விட்டதாக கூறப்பட்டது. இதையொட்டி காஞ்சிகோவில் போலீசில் புகார் செய்யப்பட்டது.

காஞ்சிகோவில் போலீசார் இந்த வழக்கை ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்துக்கு பரிந்துரைத்தனர்.

மகளிர் போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி கடத்தப்பட்ட மாணவியை மீட்டனர்.

மேலும் ஆசை வார்த்தை கூறி அவரை கடத்தி சென்றதாக கூறப்படும் வாலிபர் நந்தகுமாரை “போக்சோ” சட்டத்தில் கைது செய்தனர்.
Tags:    

Similar News