செய்திகள்

கும்மிடிப்பூண்டி அருகே வேன் கவிழ்ந்தது- பெண் உள்பட 6 பேர் படுகாயம்

Published On 2018-12-03 15:08 IST   |   Update On 2018-12-03 15:08:00 IST
கும்மிடிப்பூண்டி அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் பெண் உள்பட 6 பேர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி:

மீஞ்சூரை அடுத்த காட்டூர் அருகே உள்ள ஊராணம்பேடு கிராமத்தைச்சேர்ந்த சுமார் 10-க்கும் மேற்பட்டோர் கும்மிடிப்பூண்டி அடுத்த சுண்ணாம்புகுளம் கிராமத்தில் இருந்து எளாவூர் ரெயில் நிலையம் நோக்கி மினி லோடு வேனில் பயணம் செய்தனர். வேனை டிரைவர் சிலம்பரசன் ஓட்டினார்.

எளாவூரை அடுத்த தலையாரிப்பாளையம் அருகே ஓட்டேரி என்ற இடத்தில் சென்ற போது வேனின் டிரைவர் திடீரென பிரேக் போட்டார். இதில் கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்தது.

வேனில் பயணம் செய்த ஊரணம்பேடு கிராமத்தைச்சேர்ந்த கோபால், அவரது மனைவி கிரு‌ஷண்வேணி, ராஜீ, வரதன், முத்து மற்றும் கோவிந்தசாமிஆகிய 6 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருவொற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். விபத்து நடந்ததும் வேன் டிரைவர் சிலம்பரசன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News