செய்திகள்

நிவாரண பணிகளில் அரசு வேகமாக செயல்பட வேண்டும்- பொன்.ராதாகிருஷ்ணன்

Published On 2018-11-20 15:23 IST   |   Update On 2018-11-20 15:23:00 IST
கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகளை அரசு வேகப்படுத்த வேண்டும் என்று மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். #BJP #PonRadhakrishnan #GajaCyclone
சென்னை:

கஜா புயல் பாதித்த பகுதிகளை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

கஜா புயலால் ஏற்பட்டு இருப்பது மிகப்பெரிய பாதிப்பு. குறிப்பாக தென்னை மரங்கள் அதிக அளவில் சாய்ந்துள்ளன. அடிப்படை வசதிகளுக்காக மக்கள் சிரமப்படுவது தீர்க்கப்பட வேண்டும்.

குடிநீர், உணவு, மின்சாரம், சுகாதாரம் ஆகியவற்றுக்குத்தான் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். அந்த வகையில் பணிகளும் நடக்கிறது.

எல்லா முகாம்களிலும் அரசு பிரதிநிதி நியமிக்கப்பட வேண்டும். பல முகாம்களில் ஜெனரேட்டர் வசதி இல்லை. உடனே அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்ப்பை தெரிவிப்பது தவறு இல்லை. ஆனால் போராட்டம் மூலம் பணிகளுக்கு இடையூறு செய்வது நிவாரண பணிகளை மந்தமாக்கும் என்பதை உணர வேண்டும். அரசு பணிகளை இன்னும் வேகப்படுத்த வேண்டும்.

நிவாரண பணிகளை அரசியல் ஆக்க கூடாது. அரசியல் கட்சிகளும், போராட்டங்களை தூண்டக் கூடாது. அதற்கு பதிலாக எங்கெங்கு என்னென்ன உடனடியாக செய்ய வேண்டும் என்பதை எல்லா கட்சிகளும் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லலாம்.

மிகப்பெரிய இயற்கை பேரிடரில் சிக்கி தவிக்கும் நிலையில் மீளவும், மீட்கப்படவும் எல்லோரும் துணை நிற்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். #BJP #PonRadhakrishnan #GajaCyclone
Tags:    

Similar News