செய்திகள்
தரங்கம்பாடி பகுதியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மீனவர்களிடம் குறைகளை கேட்டறிந்த போது எடுத்த படம்.

கஜா புயல் பாதிப்பு- தரங்கம்பாடி மீனவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார் முக ஸ்டாலின்

Published On 2018-11-17 06:49 GMT   |   Update On 2018-11-17 06:49 GMT
கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் உள்ள மீனவர்களிடம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குறைகளை கேட்டறிந்தார். #GajaCyclone #DMK #MKStalin
தரங்கம்பாடி:

கஜா புயலால் தஞ்சை ,நாகை, திருவாரூர், மற்றும் கடலூர், காரைக்கால், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கடும் சேதம் ஏற்பட்டது.

ஆயிரக்கணக்கான மின் கம்பங்கள் முறிந்து விழுந்ததில் பல கிராமங்களில் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டது. விவசாய பயிர்கள் தேசமாகி உள்ளதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கடலோர பகுதிகளில் விசைப்படகுகள் சேதமானதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை பார்வையிட தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று நாகை மாவட்டத்திற்கு வந்தார்.


நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11 மணியளவில் வந்தார். அவருடன் முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு , முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் ஆகியோரும் வந்தனர்.

அப்போது அங்கு தரங்கம்பாடி மீனவர்களிடம் அவர் குறைகளை கேட்டார். கஜா புயலில் எந்தளவுக்கு சேதம் ஏற்பட்டது? மேலும் புயலின் போது வீசியெறியப்பட்டு சேதமான படகுகளை அவர் பார்வையிட்டார்.

சுமார் அரைமணி நேரம் அவர் மீனவர்கள் மற்றும் பொதுமக்களிடம் குறைகளை கேட்டார். அதன்பிறகு நாகை அக்கரைபேட்டைக்கு புறப்பட்டு சென்றார். அங்கு மீனவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

பிறகு கஜா புயலால் அதிகம் பாதிக்கப்பட்ட வேதாரண்யம் பகுதிக்கு புறப்பட்டு சென்றார். #GajaCyclone #DMK #MKStalin
Tags:    

Similar News