செய்திகள்

பாராளுமன்ற தேர்தலுடன் 20 தொகுதி இடைத்தேர்தல் நடத்த வேண்டும்- எச்.ராஜா பேட்டி

Published On 2018-11-14 10:14 GMT   |   Update On 2018-11-14 10:14 GMT
பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து 20 தொகுதி இடைத் தேர்தல் நடத்த வேண்டும் என எச்.ராஜா தெரிவித்தார். #hraja #parliamentaryelections

பழனி:

பழனியில் பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சபரிமலை விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றுவதாக கூறும் அம்மாநில முதல்வர் பினராய் விஜயன் அந்த மாநிலத்தில் இரு கிறிஸ்தவ சபைகளுக்குள் ஏற்பட்ட பிரச்சினை குறித்து வந்த தீர்ப்பை நிறைவேற்ற வில்லை. கேரள ஆர்.எஸ்.எஸ். தலைவர் ராமகிருஷ்ணன் கொலையில் முதல் குற்றவாளி பினராய் விஜயன்தான்.


பள்ளி வாசல்களில் கூம்பு வடிவ ஒலி பெருக்கிகள் பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும். மற்ற கோவில்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் மட்டும் கூம்பு வடிவ ஒலிபெருக்கிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கு பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து தேர்தல் நடத்த வேண்டும். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் பதவிக்காலம் இந்த மாதத்துடன் முடிவடைய உள்ளது. அவரது பதவிக்காலத்தை தமிழக அரசு நீட்டிக்க வேண்டும் இல்லை எனில் விரைவில் தர்ணா போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். #hraja #parliamentaryelections

Tags:    

Similar News