செய்திகள்

20 தொகுதி பொறுப்பாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி- ஓ.பி.எஸ். ஆலோசனை

Published On 2018-11-03 05:50 GMT   |   Update On 2018-11-03 05:50 GMT
சென்னையில் இன்று காலை 20 தொகுதி பொறுப்பாளர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ். ஆகியோர் ஆலோசனை நடத்தினர். #edappadipalanisamy #opanneerselvam

சென்னை:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என்று போர்க்கொடி உயர்த்தி வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன், செந்தில் பாலாஜி உள்பட 18 எம்.எல்.ஏ.க்கள் பதவி நீக்கம் செல்லும் என்று ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து அந்த தொகுதிகள் காலியாக உள்ளன.

இவற்றுடன் திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதியையும் சேர்த்து 20 தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடத்த ஏற்பாடு நடந்து வருகிறது.

தேர்தலை கவனிப்பதற்காக 20 தொகுதிகளுக்கும் அ.தி.மு.க.வில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.

இவர்களுக்கு தேர்தல் பணிகள் தொடர்பான ஆலோசனை வழங்குவதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் இன்று காலை அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு வந்திருந்தனர்.

இவர்களுடன் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி, வைத்திலிங்கம் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் வந்தனர்.

20 தொகுதிக்கான பொறுப்பாளர்கள் மாவட்டக் கழக செயலாளர்கள் என 120 பேர் இதில் கலந்து கொண்டனர். அவர்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் பேசினார்கள்.

தேர்தல் களத்தில் டி.டி.வி. தினகரன் பெரும் சவாலாக இருப்பார் என்பதால் அவரை எதிர்கொள்வது பற்றியும், அவரது பிரச்சாரத்துக்கு எவ்வாறு பதிலடி கொடுப்பது பற்றியும் விரிவாக ஆலோசனை வழங்கப்பட்டதாக தெரிகிறது.

அ.தி.மு.க. 20 தொகுதியிலும் ஜெயித்தால் 5 ஆண்டு காலம் எந்த பிரச்சினையும் இன்றி ஆட்சியை கொண்டு செல்லலாம். எனவே அதற்காக கடுமையாக உழைக்க வேண்டும்.

இதற்காக 20 தொகுதியிலும் நன்கு பரீட்சயமான உள்ளூர் நபர்களை வேட்பாளர்களாக அறிவிக்க இருக்கிறோம் என்று பொறுப்பாளர்களுக்கு ஆலோசனை கூறினார்கள். #edappadipalanisamy #opanneerselvam

Tags:    

Similar News