செய்திகள்
மலேசியாவில் புதுக்கோட்டை வாலிபர் மர்ம மரணம்
மலேசியாவில் புதுக்கோட்டை வாலிபர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள கே.கே.பட்டியைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவரது மகன் சார்லஸ் (வயது 40). இவர் ஒரு விவசாய குடும்பத்தை சேர்ந்த கூலி தொழிலாளி. மேலும் இவர் கடந்த நான்கு ஆண்டுகளாக மலேசியாவில் உள்ள ஓட்டல் ஒன்றில் மாஸ்டர் வேலை பார்த்து வந்துள்ளார்.
இவர் தன் குடும்பத்தை காப்பற்றவும், குழந்தைகளை நன்கு படிக்க வைப்பதற் காகவும், மலேசியாவிற்கு பிழைப்பு தேடி சென்றுள்ளார். இந்த நிலையில் அவர் நேற்று உயிரிழந்து விட்டதாக குடும்பத்தினருக்கு தகவல் வந்துள்ளது. ஆனால் அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக சார்லசின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கருதுகின்றனர். தொடர்ந்து இவரது உடலை சொந்த ஊருக்கு உடனடியாக கொண்டு வருவதற்கு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர், மற்றும் மத்திய, மாநில, அரசுக்கு கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
ஆலங்குடி, கறம்பக்குடி பகுதியில் மலேசிய நாட்டில் சார்லஸ் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவரின் உடலை மீட்டு வரவும், அவரின் சாவிற்கான காரணத்தை கண்டறிய வேண்டும் என்ற கோரிக்கையினை உறவினர்கள் முன்வைக்கின்றனர். மலேசியாவில் இறந்த சார்லஸ்சுக்கு உமா என்ற மனைவியும், சர்ச்சின், அபிஷேக் என்ற 2 மகன்களும் உள்ளனர்.