செய்திகள்

பெண்கள் பாலியல் செய்யப்படும் விவகாரம் கண்டிக்கத்தக்கது- சரத்குமார் சொல்கிறார்

Published On 2018-10-15 11:25 GMT   |   Update On 2018-10-15 11:25 GMT
பெண்கள் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு வரும் சம்பவங்கள் மிகவும் வருந்தத்தக்கது, கண்டிக்கத்தக்கது என்று சரத்குமார் தெரிவித்துள்ளார். #sarathkumar #metoo

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் சிவகிரியில் சமத்துவ மக்கள் கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. கூட்டத் தில் கட்சியின் தலைவர் சரத்குமார் கலந்து கொண்டார்.

முன்னதாக சரத்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

அரசியலில் யார் வேண்டு மானாலும் வரலாம். கட்சி ஆரம்பிக்கலாம். மேலும் இளைஞர்களும் மாணவர்களும் அரசியலுக்கு வர வேண்டும். அதற்காக விழிப்புணர்வு வர வேண்டும். மாணவர்கள் அரசியலுக்கு வந்தால் நாட்டின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.

பெண்கள் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு வரும் சம்பவங்கள் மிகவும் வருந்தத்தக்கது, கண்டிக்கத்தக்கது. பெண்களுக்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தமிழகத்தில் இருக்கும்போது கவர்னர் அவரது வேலையை மட்டும் பார்க்க வேண்டும். ஆய்வு செய்வது அதிகாரிகளுடன் ஆலோசனை செய்வது தேவையற்றது.


மத்திய ஆட்சியில் ஜனாதிபதி ஆய்வு செய்தால் மத்திய அரசு ஏற்றுக் கொள்ளுமா? பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. இதை கட்டுப்படுத்த மாநில மத்தி அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாராளுமன்ற தேர்தலுக்கு நாங்கள் தயாராகி வருகிறோம். ஜனவரி மாதம் தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளோம். கூட்டணி பற்றி பிறகுதான் முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு சரத்குமார் கூறினார். #sarathkumar #metoo 

Tags:    

Similar News